தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்; கலெக்டர் ெசந்தில்ராஜ் தலைமையில் நடந்தது


தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசிய போது
x
தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசிய போது
தினத்தந்தி 10 Jan 2021 11:26 AM IST (Updated: 10 Jan 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே வெள்ளம் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் என பல இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை மற்றும் புயல் காரணமக கூடுதலாக பல்வேறு பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

எனவே இந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை திட்டத்தில் கூடுதலாக பாதிக்கப்படும் என கருதப்படும் இடங்களை அதிகாரிகள் நன்கு ஆராய்ந்து அந்த பகுதிகளையும் சேர்க்க வேண்டும். மேலும் பேரிடர் மேலாண்மை பதிவேட்டில் தொடர்பு தொலைபேசி எண்களையும் சேர்க்க வேண்டும். இப்பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி கலெக்டர்
கூட்டத்தில் உதவி கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் கலோன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, கடல்படை உதவி கமாண்டர் சிவபாலன், மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், பேரிடர் தாசில்தாா் செல்வபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story