வாணியம்பாடி அருகே, டிரைவருக்கு திடீர் வலிப்பால் தடுப்பு சுவர் மீது மோதிய அரசு பஸ் - 35 பயணிகள் காயமின்றி தப்பினர்


வாணியம்பாடி அருகே, டிரைவருக்கு திடீர் வலிப்பால் தடுப்பு சுவர் மீது மோதிய அரசு பஸ் - 35 பயணிகள் காயமின்றி தப்பினர்
x
தினத்தந்தி 10 Jan 2021 1:36 PM GMT (Updated: 10 Jan 2021 1:36 PM GMT)

வாணியம்பாடி அருகே அரசு பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் 35 பயணிகள் காயமின்றி தப்பினர்.

வாணியம்பாடி, 

வேலூரிலிருந்து ஓசூருக்கு நேற்று பிற்பகல் 35 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் சங்கர் (வயது 45) ஓட்டினார். வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே சென்றபோது டிரைவர் சங்கருக்கு திடீரென உடல் சோர்வு இருந்ததால் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறிய பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. நல்லவேளையாக அந்த இடத்திலேயே பஸ் நின்று விட்டது. இதனால் பஸ்சில் இருந்த 35 பயணிகள் காயமின்றி தப்பினர். எனினும் டிரைவர் சங்கர் லேசான காயம் அடைந்தார். அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வாணியம்பாடி தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story