ராணிப்பேட்டையில், காந்தி சிலைக்கு காங்கிரஸ் செயல் தலைவர் குப்புசாமி மாலை நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அணிவித்தார்


ராணிப்பேட்டையில், காந்தி சிலைக்கு காங்கிரஸ் செயல் தலைவர் குப்புசாமி மாலை நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அணிவித்தார்
x
தினத்தந்தி 10 Jan 2021 2:02 PM GMT (Updated: 10 Jan 2021 2:05 PM GMT)

ராணிப்பேட்டையில் காந்தி சிலைக்கு காங்கிரஸ் செயல் தலைவர் குப்புசாமி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார்.

சிப்காட் ( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் செயல் தலைவராக ஆர்.கே.குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி ஆகியோரின் ஒப்புதலின் பேரிலும், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் பரிந்துரையின் பேரிலும் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாநில செயலாளர் அக்ரகாரம் பாஸ்கர் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்ற ஆர்.கே.குப்புசாமி நேற்று காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்று, ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் வசீகரன், உதயகுமார், கமலக்கண்ணன், காந்தி, ராமதாஸ், ஜெயவேல், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story