மாவட்ட செய்திகள்

வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் + "||" + Bulls preparing for jallikkattu in vatrairuppu area

வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
வத்திராயிருப்பு,

தென் மாவட்டங்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். .

இந்த போட்டிகளில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்பது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

மேலும் மாடுகளுக்கு சத்தான உணவு வகைகளான பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், பருத்திக்கொட்டை, புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வயல் வெளிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்து மாடு பிடிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா விதிகளின் கட்டுப்பாடுகளின் படி ஒரு மாட்டுடன் இருவர் தான் வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய விதிமுறைகளை தளர்த்தி விட்டு, பழைய நடைமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.