போயம்பாளையம் அருகே, பணம் வைத்து சூதாடிய 26 பேர் கைது -ரூ.1¾ லட்சம் பறிமுதல்


போயம்பாளையம் அருகே, பணம் வைத்து சூதாடிய 26 பேர் கைது -ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jan 2021 10:15 PM IST (Updated: 10 Jan 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

போயம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகி விட்டனர். ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த நஞ்சப்பாநகர் அருகே கே.எல்.கிளப் என்ற தனியார் கிளப்பில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கிளப்பை அதிரடியாக சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் அவினாசியை சேர்ந்த ராமசாமி (வயது 36) என்பவர் உள்பட 26 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 26 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 410-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கிளப் உரிமையாளர் ராஜா, மேலாளர் முத்து ஆகியோர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story