பாடகி கற்பழிப்பு புகார் எதிரொலி: மந்திரி தனஞ்செய் முண்டே ராஜினாமா கோரி பா.ஜனதா மகளிரணி போராட்டம் - மாநிலம் முழுவதும் நடந்தது


பாடகி கற்பழிப்பு புகார் எதிரொலி: மந்திரி தனஞ்செய் முண்டே ராஜினாமா கோரி பா.ஜனதா மகளிரணி போராட்டம் - மாநிலம் முழுவதும் நடந்தது
x
தினத்தந்தி 19 Jan 2021 6:23 AM IST (Updated: 19 Jan 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

பாடகி மீதான கற்பழிப்பு புகாரை அடுத்து மந்திரி தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக பா.ஜனதா மகளிரணியினர் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை, 

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே (வயது 45). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது மும்பையை சேர்ந்த 37 வயது பாடகி ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே 2006-ம் ஆண்டு முதல் தன்னை பல தடவை கற்பழித்து உள்ளார் என்றும், இது தொடர்பாக ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மந்திரி தனஞ்செய் முண்டே பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வலியுறுத்தினார். இல்லையெனில் அவரை பதவி விலக வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜனதா மகளிரணியினர் போராட்டம் நடத்துவார்கள் என அறிவித்தார்.

இதன்படி நேற்று பா.ஜனதா மகளிரணியினர் மாநிலம் முழுவதும் தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தானேயில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மகளிர் அணி தலைவி ஒருவர் கூறுகையில், “பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை மந்திரிசபையில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தனஞ்செய் முண்டேவை உடனடியாக பதவி நீக்கவேண்டும்.” என்றார்.

இதேசமயம் மந்திரி தனஞ்செய் முண்டே பாடகியின் புகாரை திட்டவட்டமாக மறுத்ததுடன், தன்னை பிளாக் மெயில் செய்யவே இவ்வாறு குற்றம் சாட்டுவதாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story