மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு + "||" + Enthusiastic welcome to MK Stalin on the Salem district border

சேலம் மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சேலம் மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சேலம் மாவட்ட எல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம், 

எடப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி கிராமத்தில் நேற்று தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். பின்னர் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சேலம் மத்திய, சேலம் மேற்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இனணந்தவர்களை வரவேற்கிறேன்

பின்னர் அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் இந்த ஆட்சியின் சாதனைகளை கூறி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் தி.மு.க.வை கொச்சை படுத்தி பேசுவதை தான் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது மட்டுமல்ல கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதனை எல்லாம் தகர்த்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக தர்மபுரியில் இருந்து எடப்பாடி தொகுதிக்கு வரும் வழியில் சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, மக்கள் தலையா? கடல் அலையா? என்று தெரியாத வண்ணம் மக்கள் திரண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் வாழ்ந்த இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன். நிச்சயம் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், பாலசுப்பிரமணியம், ரமேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மெய்யனூர் பகுதி செயலாளர் ஆ.சரவணன் தலைமையில் மோட்டார் சைக்கிளில் சென்று தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் சென்று மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி வரவேற்பு
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கி வரவேற்றனர்.
2. இந்தியா-சீனா படைகள் வாபஸ்; அமெரிக்கா வரவேற்பு
இந்தியா-சீனா நாடுகள் எல்லையில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
3. செண்டை மேளதாளங்கள் முழங்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழிநெடுகிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்பு
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்புடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.
4. சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காள வாலிபர் சைக்கிள் பயணம் தஞ்சையில் போலீசார் வரவேற்பு
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காளத்தை சேர்ந்த வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சை வந்த அவருக்கு போலீசார் வரவேற்பு அளித்தனர்.
5. நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என பிரேமலதா பேட்டி
தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.