‘பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது' - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பவானி
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையத்தில் நேற்று காலிங்கராயன் தினவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நல்வாழ்வு துறை வழங்கிய அறிவுரைப்படி பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளுடன் பள்ளிகளில் இருக்கைகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிட்ட பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும்.
பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதனை அவர்கள் பின்பற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story