திருப்பத்தூரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருப்பத்தூரில் நடந்த ஊர்வலத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு மாதவிழாவையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட்பெல்ட் அணிவது குறித்தும் காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், இருசக்கர வாகன விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் சிவன்அருள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
அவர்களும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் தருமபுரி கூட்ரோடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
ஊர்வலத்தில் தலைக் கவசம் உயிர்கவசம், செல்போன் பேசிக்கொண்டு, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடவேண்டும், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story