கடலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


கடலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 19 Jan 2021 10:44 PM IST (Updated: 19 Jan 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே கடலில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவன் பிச்சாண்டி மகன் பிரபு (வயது 16). இவன் புதுவை காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி பிரபு தனது நண்பர்களுடன் நொச்சிக்குப்பம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கடல் அலையில் பிரபு இழுத்து செல்லப்பட்டான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவனை மீட்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் கடல் அலையில் அவன் இழுத்து செல்லப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினரும், மரக்காணம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை 5 மணியளவில் சின்ன காலாப்பட்டு கடற்கரைப்பகுதியில் பிரபுவின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story