புதுச்சத்திரம் அருகே கடலில் மூழ்கிய என்ஜினீயர் உடல் 3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது
புதுச்சத்திரம் அருகே கடலில் மூழ்கிய என்ஜினீயர் உடல் 3 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது.
சிதம்பரம்,
குறிஞ்சிப்பாடி வட்டம் அம்பலவாணன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயர். இவர் கடந்த 15-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் செல்வகணபதி, சுபாஷ் காந்தி ஆகியோருடன் சாமியார்பேட்டை அருகே உள்ள பேட்டோடை கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவா்கள் 3 பேரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை, அருண்குமாரை இழுத்துச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வகணபதியும், சுபாஷ் காந்தியும் கடலில் தேடி பார்த்தும் அருண்குமார் கிடைக்கவில்லை.
இதுகுறி த்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடலில் மூழ்கிய அருண்குமாரை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார் உடல், சாமியார்பேட்டை கடற்கரையில் ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story