நெல்லை-தென்காசி சாலையை சீரமைக்க வேண்டும்; கலெக்டரிடம், பூங்கோதை எம்.எல்.ஏ. மனு
தி.மு.க. மருத்துவ அணி தலைவரும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
அந்த மனுவில், ‘‘நெல்லை -தென்காசி சாலை கடந்த 9 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது உயிர் பலி வாங்கும் சாலையாகவும் மாறி உள்ளது. அங்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதும் தெரியவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் நெல்லை -தென்காசி சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story