காட்பாடியில் முதியவர் கொலை வழக்கில் சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சைக்கோ வாலிபர் கைது
காட்பாடி
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை அருகே தனியார் கிளினிக் உள்ளது. அங்கு சம்பவத்தன்று இரவு 70 வயது முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் முதியவரின் தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என கூறப்படுகிறது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் அங்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்தவர் அருப்புமேடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் (வயது 24) என தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நான் மது போதையில் இருந்ததால் என்ன நடந்தது என தெரியவில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் அந்த வாலிபர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்கிறார். அவர் வீட்டில் சரியாக தங்குவதில்லை. கொலை நடந்த அன்று இரவு முதியவரின் தலையில் 3 தடவை கல்லைப் போட்டு விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story