ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆத்தூரில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2021 11:34 PM IST (Updated: 20 Jan 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆத்தூர் பேரூராட்சி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆறுமுகநேரி,

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆத்தூர் பேரூராட்சி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணங்களை உடனடியாக வழங்க கோரியும், ஆற்றின் கரை ஓரம் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கரைகளை மராமத்துப் பணி செய்தல் மற்றும் தடுப்பு சுவர் கட்டவேண்டும், ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் வரை செல்லும் தார் சாலைகளை முழுவதுமாக சீர் செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் நகர செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் குளோரியான், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற செயலாளர் பிரபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் இனிதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் மெர்வின், ஆறுமுகநேரி நகர செயலாளர் ஆனந்தவேல் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story