ஆலங்குளம் அருகே அம்மா மினி கிளினிக் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


ஆலங்குளம் அருகே அம்மா மினி கிளினிக் அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Jan 2021 1:27 AM IST (Updated: 21 Jan 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே நல்லூர், பூலாங்குளம், கல்யாணிபுரம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே நல்லூர், பூலாங்குளம், கல்யாணிபுரம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

விழாவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹரசுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் குத்தால ராஜ், சுகாதார ஆய்வாளர் கங்காதரன், மருத்துவர்கள் ஆஸ்மி, முகமது தாரிக், தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story