இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் ஆய்வு


இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் ஆய்வு
x
தினத்தந்தி 21 Jan 2021 4:39 AM IST (Updated: 21 Jan 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணி நடைபெற்று வந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழைதிருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக மக்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டன.

தஞ்சாவூர்,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணி நடைபெற்று வந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழைதிருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக மக்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டன. இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தநிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகம் தஞ்சை வாக்காளர் பதிவு அலுவலகம், துணை வாக்காளர் பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற சண்முகம், இறுதிவாக்காளர் படடியல் சிறப்பான முறையில் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களை வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story