சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது


சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Jan 2021 3:15 AM IST (Updated: 22 Jan 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள வீராணம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுமி வந்தாள். 

அப்போது அவர் அந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு, ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story