வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை-டால்பின்


வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை-டால்பின்
x
தினத்தந்தி 22 Jan 2021 3:14 AM IST (Updated: 22 Jan 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கடற்கரையில் ஆலிவர்ரெட்லி ஆமை மற்றும் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

வேதாரண்யம்,

பசுபிக் பெருங்கடல் பகுதியில் வசித்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் பருவமழை காலங்களில் இனப்பெருக்கத்துக்காக வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம்.

இதற்காக அவை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதிக்கு வரும் ஆமைகள் மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 15 முதல் 25 வரை முட்டைகள் இட்டு அந்த குழியை மணலால் மூடிவிட்டு, மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.

இறந்த நிலையில்...

இந்த நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் நேற்று 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமையும், சிறிய வகை டால்பினும் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அவை கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவருடன் அங்கு சென்று இறந்து கிடந்த ஆலிவர் ரெட்லி ஆமையையும், டால்பினையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story