புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு மாதுசாமி உள்பட 10 பேரின் துறைகள் மாற்றம்
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி அரவிந்த் லிம்பாவளிக்கு வனத்துறையும், உமேஷ்கட்டிக்கு உணவு வழங்கல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாதுசாமி உள்பட 10 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் எடியூரப்பா மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து அந்த காலியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் கடந்த 13-ந் தேதி மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. அதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அதாவது உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, எஸ்.அங்கார், சி.பி.யோகேஷ்வர், எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோர் பதவி ஏற்றனர்.
ஒரு வாரமாகியும் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தன. 21-ந் தேதி புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அதன்படி நேற்று புதிய மந்திரிகளுக்கு இலாகாக்களை ஒதுக்கி கவர்னரின் அனுமதிக்காக அரசு அனுப்பியது. அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஏற்கனவே மந்திரிகளாக உள்ளவர்களில் சிலரிடம் இருந்து துறைகள் பறிக்கப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் மாதுசாமி உள்பட 10 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கூடுதலாக சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி மாதுசாமி வசம் இருந்த இந்த துறைக்கு பதிலாக அவருக்கு மருத்துவ கல்வி மற்றும் கன்னட கலாசாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கனிம சுரங்கத்துறையை நிர்வகித்து வந்த மந்திரி சி.சி.பட்டீலிடம் இருந்து அந்த துறை பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சிறுதொழில், செய்தி மக்கள் தொடர்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோட்டா சீனிவாச பூஜாரியிடம் இருந்து மீன்வளம் பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை புதிய மந்திரி எஸ்.அங்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மந்திரி சுதாகர் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி ஆகிய 2 துறைகளை நிர்வகித்து வந்தார். தற்போது அவரிடம் இருந்து மருத்துவ கல்வி பறிக்கப்பட்டுள்ளது. அது மந்திரி மாதுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. மந்திரி ஆனந்த்சிங்கிடம் இருந்து வனம் பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக அவருக்கு சுற்றுலா மற்றும் புவியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மந்திரி கோபாலாய்யாவிடம் இருந்த உணவு மற்றும் பொது வினியோகத்துறை பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக தோட்டக்கலை மற்றும் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி நாராயணகவுடாவில் இருந்து தோட்டக்கலை பறிக்கப்பட்டு இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் ஹஜ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஹஜ் துறை மந்திரி பிரபுசவானிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டு இருப்பதால் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அதாவது கோபாலய்யா, மாதுசாமி, சுதாகர், நாராயணகவுடா போன்றவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதிய மந்திரிகளின் இலாகா ஒதுக்கீடு விவரம் வருமாறு:-
முருகேஷ் நிரானி
1. முதல்-மந்திரி எடியூரப்பா - பணியாளர், நிர்வாக சீர்திருத்தம், மந்திரிசபை விவகாரம், நிதி, பெங்களூரு நகர வளர்ச்சி, மின்சாரம், உளவுத்துறை, திட்டமிடல்-புள்ளியல், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற மந்திரிகளுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகள்
2. உமேஷ்கட்டி - உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம்
3. எஸ்.அங்கார் - மீன்வளம், துறைமுகம்
4. அரவிந்த் லிம்பாவளி - வனம்
5. முருகேஷ் நிரானி - கனிமம் மற்றும் புவியியல்
6. எம்.டி.பி.நாகராஜ் - கலால்.
கோட்டா சீனிவாச பூஜாரி
7. சி.பி.யோகேஷ்வர் - சிறிய நீர்ப்பாசனம்
8. ஆர்.சங்கர் - நகராட்சி நிர்வாகம், பட்டு
இலாகா மாற்றப்பட்ட மந்திரிகளுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம்:-
9. பசவராஜ் பொம்மை - போலீஸ், சட்டம், சட்டசபை விவகாரம்
10. மாதுசாமி - மருத்துவ கல்வி, கன்னட கலாசாரம்
11. சி.சி.பட்டீல் - சிறுதொழில், செய்தி மக்கள் தொடர்பு
12. கோட்டா சீனிவாசபூஜாரி - இந்து அறநிலையம், பிற்படுத்தப்பட்டோர் நலன்
13. சுதாகர் - சுகாதாரம்
கோபாலய்யா
14. ஆனந்த்சிங் - சுற்றுலா, சுற்றுச்சூழல், புவியியல்
15. சிவராம் ஹெப்பார் - தொழிலாளர் நலன்
16.கோபாலய்யா - தோட்டக்கலை, சர்க்கரை
17. நாராயணகவுடா - இளைஞர் நலன்-விளையாட்டு, ஹஜ், வக்பு வாரியம்
18. பிரபுசவான் - கால்நடை வளர்ச்சி.
Related Tags :
Next Story