உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரைநிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் அருகே படியூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2 வது நாளான நேற்று அரை நிர்வாணத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட
விவசாயிகள் அரைநிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்
காங்கேயம்:
காங்கேயம் அருகே படியூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2 வது நாளான நேற்று அரை நிர்வாணத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்கள் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திருப்பூர் மாவட்டம் - படியூர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், மதுரை மாவட்டம் - வாலந்தூர் (உசிலம்பட்டி) ஆகிய இடங்களில் 2 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் - படியூர் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று போராட்டத்தின்போது விவசாயிகள் அரைநிர்வாணமாக அமர்ந்து கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
கூடுதல் இழப்பீடு
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர்மின் கோபுர திட்டத்தை சாலை ஓரமாக புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டத்தையும், இந்திய தந்தி சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு முறையில் நிலத்திற்கு இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது, இதனால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே நிலம் மற்றும் பயிர்களுக்கு அரசாணை எண் 54 யை அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். உயர்மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையான 100 சதவீதம் ஆதாரத்தொகையை அளிக்க வேண்டும். தற்போதுள்ள இழப்பீட்டு முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகக் குறைந்த இழப்பீடு கிடைக்கிறது. இதனால் தமிழக அரசு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.50,000 அறிவித்துள்ளதை உயர்த்தி குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.
பொய் வழக்கு
திட்டப்பாதையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். அறவழியில் போராடிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38 பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story