அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தை படத்தில் காணலாம்.
x
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 22 Jan 2021 5:07 AM GMT (Updated: 22 Jan 2021 5:07 AM GMT)

அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

பஸ் நிறுத்தம்
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலை விஷயமாக கரூர் மற்றும் அரவக்குறிச்சி, திண்டுக்கல் சென்று வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் மலைக்கோவிலூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் பிரிவு சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.

அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பஸ் பிடித்து வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்திலிருந்து சற்று தூரம் தள்ளி மூலப்பட்டி ரோடு, மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

அடிக்கடி ஏற்படும் விபத்துகள்
இப்பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பஸ் நிறுத்தம் வந்து தான் செல்ல வேண்டும். தற்போது பிரிவு சாலையிலிருந்து செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையை அடையும் இடத்தின் அருகிலேயே மேற்குறிப்பிட்ட மூலப்பட்டி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பிரிவு சாைல உள்ளது.

இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் வளைவாகவும், சறுகளாகவும் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச்செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட மூலப்பட்டிபிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்தை ஏற்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் விபத்தினால் பல உயிர் சேதங்களும் நடந்துள்ளன.

பொதுமக்கள் கோரிக்கை
எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மூலப்பட்டி சாலை பிரிவு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகில் பஸ் செல்லும் அளவிற்கு மட்டும் வழிவிட்டு மற்ற இடத்தில் தடுப்பு கம்பிகளை அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story