நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த வாலிபர் - திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த வாலிபர் - திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Jan 2021 4:01 PM IST (Updated: 22 Jan 2021 4:01 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள கலர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவர், நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேன் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு சொந்தமாக பவித்திரம் கிராமத்தில் நிலம் உள்ளதாகவும், அதனை அவர்களது உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், அதனை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க வந்ததாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் வெறையூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story