வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 5:44 PM IST (Updated: 22 Jan 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். நிதி காப்பாளர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மீதான நெருக்கடிகள், தொல்லைகளையும் கைவிட வேண்டும். ஜாக்டோ, ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story