விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jan 2021 7:11 PM IST (Updated: 22 Jan 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

விருதுநகர்,

மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 86 ஆயிரத்து 906 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,522 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 16,238 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 53 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,528 ஆக உயர்ந்துள்ளது. 4,468 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3,590 பேரின் மருத்துவபரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் தவிர்க்கப்படவில்லை.

Next Story