மேலூர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


மேலூர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2021 9:21 PM IST (Updated: 22 Jan 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் சட்டமன்ற தொகுதியை மீண்டும். அ.தி.மு.க. கைப்பற்றும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மேலூர்,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மேலூர் அருகே கீழவளவில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பொன்ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நகர செயலாளர் பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச்செயலாளர் பெரியசாமி என்ற துரைப்பாண்டி, மதுரை கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச்செயலாளர் அருண், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார்பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் பிரபு, அ.வல்லாளபட்டி கிளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழரசன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், திரைப்பட நடிகர் வையாபுரி, கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிய தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான ஜபார் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

33 ஆண்டுகளுக்கு பிறகும் எம்.ஜி.ஆரை இன்னும் மக்கள் மனதில் நினைவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஒழுக்கத்தை நாட்டு மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள், அனைவருக்கும் இலவச பொருட்கள் உட்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரசாந்த் கிஷோரிடம் பலகோடி ரூபாய் கொடுத்து எப்படியாவது ஆட்சி அமைக்க தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை நாடியுள்ளார். ஆனால் மக்கள், இளைஞர்களின் ஆதரவுடன் தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேலூர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் கீழவளவு செல்வஇளங்கோ, மேலூர் நகர் நிர்வாகிகள் சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், சரவணகுமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சோனியாகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story