கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மண்டாலாபிஷேக நிறைவு விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
கரூர்:
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாஹம், கலச ஆவாஹணம், 108 கலச பூஜை, முதல்கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை 2-ம் காலயக பூஜை, பூர்ணாஹூதி, தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு கலச அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலை பஞ்சமூர்த்திகள் வெள்ளிவாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story