ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் நகை, பணம் கொள்ளை
ஓசூரில் தனியார் நிதிநிறுவனத்தில் நேற்று 25 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.96 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஓசூர்:
ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனானஸ் என்ற தனியார் நிதிநிறுவனத்தில் நேற்று 25 கிலோ எடை கொண்ட ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.96 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த தனியார் நிதிநிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story