போலீஸ் வாகனம் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் பலி


போலீஸ் வாகனம் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் பலி
x
தினத்தந்தி 23 Jan 2021 3:45 AM IST (Updated: 22 Jan 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி எதிரே வந்த போலீஸ் வாகனம் அய்யாதுரை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கள்ளக்குறிச்சி, 

சின்னசேலம் அருகே அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 54). கள்ளக்குறிச்சி அடுத்த சூ.பாலப்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சு.பாலப்பட்டு ரேஷன் கடைக்கு புறப்பட்டார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை கோமுகி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி எதிரே வந்த போலீஸ் வாகனம் அய்யாதுரை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அய்யாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story