உடுமலை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது வாகனம் மோதி பலி


உடுமலை அருகே  பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது வாகனம் மோதி பலி
x
தினத்தந்தி 23 Jan 2021 4:00 AM IST (Updated: 22 Jan 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார்.

உடுமலை, 

உடுமலை அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது வாகனம் மோதியதில் அவர் பலியானார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  கோவிந்தகவுண்டன்புதூரை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருவதுவழக்கம். அதன்படி கடந்த 21-ந் தேதி கோவிந்தகவுண்டன்புதூரை சேர்ந்த விவசாயி  ராஜமாணிக்கம் (வயது55) உள்பட ஏராளமானவர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். 

அதன்படி அன்று இரவு உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பூலாங்கிணர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம்  ராஜமாணிக்கம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ராஜமாணிக்கம் இறந்து விட்டதாகத்தெரிவித்தார். இந்த விபத்து குறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார். பழனி பாதயாத்திரை  பக்தர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story