மாவட்ட செய்திகள்

மழையால் பயிர்கள் சேதம்: மானூர் பகுதியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு + "||" + Crop damage due to rains: Collector Vishnu inspects Manor area

மழையால் பயிர்கள் சேதம்: மானூர் பகுதியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு

மழையால் பயிர்கள் சேதம்: மானூர் பகுதியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு
மானூர் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை கலெக்டர் விஷ்ணு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் கடந்த வாரம் பெய்த பருவம் தவறிய தொடர் மழையால் அழகியபாண்டியபுரம், வன்னிக்கோனேந்தல் மற்றும் கூவாச்சிபட்டி ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.


இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு அந்த பகுதிகளில் உள்ள வயல்களில் நடந்து சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நஷ்டஈடு

மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடைக்கான வயல் தேர்வு செய்யப்பட்டு, கலெக்டர் முன்னிலையிலேயே உளுந்து பயிர் அறுவடை செய்யப்பட்டதோடு கள ஆய்வும் நடத்தப்பட்டது. அதில் கிடைத்த பயிர்கள் விற்பனைக்கோ மற்றும் உபயோகத்திற்கோ ஏற்றதாக இல்லை என்பது நேரடி ஆய்வில் தெரியவந்தது. மேலும் அந்த பகுதிகளில் சில விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நஷ்டஈடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது நெல்லை வேளாண் இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், துணை இயக்குனர் அசோக்குமார், முனைவர் சுந்தர் டேனியல் பாலஸ், துணை கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ராஜேந்திரன், வேளாண் உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிரேபா, வேளாண் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது சென்னை கலெக்டர் அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது சென்னை கலெக்டர் அறிவிப்பு.
2. திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் சாலை பணி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா ஆய்வு செய்தார்.
3. லடாக் சென்று ஆய்வு செய்யும், பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழு, லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்குக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது.
4. தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் கலெக்டர் சாந்தா தகவல்
நன்னிலம் அருகே சொரக்குடியில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.
5. திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்விசை சக்கரம் கலெக்டர் சாந்தா வழங்கினார்
திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் விசை சக்கரத்தினை கலெக்டர் சாந்தா வழங்கினார்.