கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை சிறை காவலர் கைது


கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை சிறை காவலர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2021 2:27 AM IST (Updated: 23 Jan 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தொடர்பாக சிறை காவலர் கைது செய்யப்பட்டார்.

நாக்பூர்,

நாக்பூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் கிடைப்பதாக சிறை நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சிறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறை காவலரான மங்கேஷ் மதுக்கர் சோலங்கி (வயது28) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

கைது

உடனடியாக அவரை பிடித்து சோதனை போட்டனர். இதில் அவர் சாக்ஸ்சில் மறைத்து வைத்து இருந்த 28 கிராம் எடையுள்ள சரஸ் போதைப்பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சிறை சூப்பிரண்டு அனுப் கும்ரே முன்பு தான்டோலி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை காவலர் மங்கேஷ் மதுக்கர் சோலங்கியை கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

Next Story