பெண் உதவி இன்ஸ்பெக்டரை கற்பழித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப்பதிவு


பெண் உதவி இன்ஸ்பெக்டரை கற்பழித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Jan 2021 2:29 AM IST (Updated: 23 Jan 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

பெண் உதவி இன்ஸ்பெக்டரை கற்பழித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் உதவி கமிஷனராக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தற்போது மரத்வாடா மண்டலத்தில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் மீது அவருடன் மும்பையில் பணிபுரிந்த 31 வயது பெண் உதவி இன்ஸ்பெக்டா் ஒருவர் ஆர்.ஏ.கே. மார்க் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

வழக்குப்பதிவு

அந்த புகாரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மும்பையில் பணியாற்றிய போது, திருமணம் செய்வதாக கூறி தன்னை கற்பழித்ததாக கூறியுள்ளார். தற்போது அவர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இந்த புகார் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story