‘‘எனக்கும் முதல்-மந்திரி ஆக ஆசை’’ மந்திரி ஜெயந்த் பாட்டீல் சொல்கிறார்


‘‘எனக்கும் முதல்-மந்திரி ஆக ஆசை’’ மந்திரி ஜெயந்த் பாட்டீல் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Jan 2021 2:57 AM IST (Updated: 23 Jan 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

எல்லா அரசியல்வாதிகளை போலவும், எனக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதாக மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெயந்த் பாட்டீல். இவர் சாங்கிலியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா அரசியல்வாதிகளை போல தனக்கும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எல்லா அரசியல்வாதிகளும் முதல்-மந்திரியாக ஆக வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல நானும் முதல்-மந்திரியாக கண்டிப்பாக ஆசைப்பட வேண்டும். சரிதானே?. ஆனால் இந்த விவகாரத்தில் கட்சியும், சரத்பவாரும் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். எல்லோரும் முதல்-மந்தியாக விரும்புவார்கள். என்னை போல நீண்ட காலமாக அரசியலில் உழைத்தவர்கள் முதல்-மந்திரியாக ஆசைப்படுவார்கள்.

அஜித்பவார் ஆதரவு

எனது வாக்காளர்களும் கண்டிப்பாக நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்ப வேண்டும். எனவே நான் முதல்-மந்திரியாக விரும்புகிறேன். ஆனால் சூழ்நிலையும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் முக்கியம். எங்களுக்கு 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

54 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு முதல்-மந்திரி ஆவதில் சாத்தியமில்லை. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விரிவடைந்தால் அதன்பிறகு சரத்பவார் என்ன முடிவு செய்கிறாரோ அது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் ஜெயந்த் பாட்டீல் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கூறியது குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் கேட்ட போது, "அவர் வெளிப்படுத்திய ஆசைகளுக்கு எல்லாம், நான் ஆதரவு தருகிறேன் " என வேடிக்கையாக தெரிவித்தார்.

Next Story