சேந்தமங்கலம் அருகே கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகை
கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகை
சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த சங்கத்தில் பல்வேறு வகையான கடன் பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கடன் தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த சங்கத்தின் மூலம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கி வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் புதூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திடீரென திரண்டு வந்து அந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இல்லாததால் அங்கிருந்த நிர்வாகிகளிடம் அந்த பெண்கள் கடன் தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்குமே கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நேற்று காலை அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சங்கத்தை பெண்கள் முற்றுகையிட்ட தகவல் கூட்டுறவு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் உயர் அதிகாரிகள் கடன் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்க உத்தரவிட்டனர். அதையடுத்து அந்த சங்கத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story