வெள்ளகோவில் பி.ஏ.பி.கிளை வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் காங்கேயத்தில் பரபரப்பு


வெள்ளகோவில் பி.ஏ.பி.கிளை வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் காங்கேயத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2021 4:58 AM IST (Updated: 23 Jan 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பி.ஏ.பி. கிளை வாய்க்கால்

 வெள்ளகோவிலில் பி.ஏ.பி.  கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலுக்கு உரிய தண்ணீரை முறையாக திறந்து விடுவது இல்லை என்று,  காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழுவினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். எனவே தண்ணீரை முறையாக திறந்து விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே வெள்ளகோவில் பி.ஏ.பி.கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விடக்கோரி காங்கேயம்- வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள் காங்கேயம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

முற்றுகை

இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்றும் 4-வது நாளாக நடந்தது. 4-வது நாள் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாலை 3.30 மணிக்கு உண்ணாவிரத பந்ததலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்றனர். பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சிவகாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாததால் விவசாயிகள் அங்கேயே அமர்ந்துள்ளனர்.

Next Story