மாறிவரும் பருவநிலையால் செடிகளில் அழுகும் தக்காளிகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தினமும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.12 முதல் ரூ.15 வரையிலும், கடைகள் மற்றும் பிற சந்தைகளில் ரூ.16 முதல் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்த திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் சில பகுதிகளில் நன்றாக விளைந்த தக்காளிகள் அறுவடைக்கு முன்பே செடிகளில் அழுகி விடுகின்றன. இவ்வாறு அழுகிய தக்காளிகளை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி வருகிறார்கள்.
தக்காளி விலை சீராக உள்ள நிலையிலும் பருவநிலை மாற்றத்தால் செடிகளில் தக்காளி அழுகும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story