மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல் + "||" + 3 arrested for selling Gutka

பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்

பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா
பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குட்கா, பான் மசாலா, போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கிருஷ்ணகுமார், உள்ளிட்ட போலீசார் பல்லடம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது பல்லடம் அருகே அம்மாபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில்,  சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை துரத்தி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

3 பேர் கைது
 விசாரணையில் அவர்கள் பல்லடம் புளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 36 ), பல்லடம் அம்மாபாளையம் திருவள்ளூவர் நகரை ஹபீப்கான் (40), ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த பிரகாஷ் (36), என்பதும் பல்லடம் நகரம், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா விற்பனை செய்ததும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய குட்கா பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்கள் ரகசிய இடத்தில் பாலிதீன் பையால் மூடி வைத்திருந்த குட்கா  உள்ளிட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது.
2. இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது
இரிடியம் கலந்த கோபுர கலசம் விற்ற மோசடி வழக்கில் 2 பேர் கைது.
3. பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கொன்றில் போலீசார் கைது செய்துள்ளனர்.
4. கோவையில் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் 640 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை
நவால்னி கைது விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆலோசனை நடத்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை