கலசபாக்கம் அருகே, இலங்கை அகதிகள் முகாமில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கலசபாக்கம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கனகராஜ், பெயிண்டர். அவரது மனைவி மேரி (வயது 34). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மேரி வீட்டில் தூக்கில் தொங்கினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக உயிழந்தார்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story