அடிமாலி அருகே சிறுத்தையை அடித்து கொன்ற 5 பேர் கைது இறைச்சி, தோல் பறிமுதல்
அடிமாலி அருகே சிறுத்தையை அடித்து கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சிறுத்தை இறைச்சி மற்றும் தோல் பறிமுதல் செய்யப்பட்டது.
மூணாறு,
இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே மாங்குளம் விரிவுபாறையை சேர்ந்தவர் வினோத் (வயது 45). இவரது வீட்டில் சிறுத்தை இறைச்சியை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வினோத் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் சிறுத்தை இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுத்தை இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், வினோத்தை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், வினோத் வசிக்கும் பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி உலா வந்தபடி இருந்தது. இதையடுத்து அவர், தனது நண்பர்களான மாங்குளத்தை சேர்ந்த குரியாகோஸ் (64), பினு (50), வின்ெசன்ட் (50), குஞ்சப்பன் (50) ஆகியோருடன் சேர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி சிறுத்ைத உலா வரும் பகுதியை கண்காணித்து, அங்கு அவர்கள் கண்ணி வலையை வைத்தனர். அப்போது அங்கு வந்த சிறுத்தை, அவர்கள் வைத்த கண்ணி வலையில் சிக்கியது. இதையடுத்து வினோத் மற்றும் அவரது நண்பர்கள் சிறுத்தையை அடித்து கொன்றனர். மேலும் அதன் இறைச்சியை 4 பேரும் பங்கு போட்டு வீட்டிற்கு எடுத்து சென்று, குழம்பு வைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, வினோத்ைத கைது செய்தனர். பின்னர் அவர் மூலம் இதில் தொடர்புடைய குரியாகோஸ், பினு, வின்சென்ட், குஞ்சப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ சிறுத்தை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், வினோத் வீட்டில் இருந்து சிறுத்தை இறைச்சி குழம்பு, தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story