மாவட்ட செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆடு திருடிய 7 பேர் கைது; கார்-மோட்டார்சைக்கிள் பறிமுதல் + "||" + arrest

புஞ்சைபுளியம்பட்டியில் ஆடு திருடிய 7 பேர் கைது; கார்-மோட்டார்சைக்கிள் பறிமுதல்

புஞ்சைபுளியம்பட்டியில் ஆடு திருடிய 7 பேர் கைது; கார்-மோட்டார்சைக்கிள் பறிமுதல்
புஞ்சைபுளியம்பட்டியில் ஆடு திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவரிகளிடம் இருந்து கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் ஆடு திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவரிகளிடம் இருந்து கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 63). இவர் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை இவருடைய வீட்டின் அருகே கட்டி வைத்து இருந்த ஒரு ஆட்டை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திருடி கொண்டு இருந்தார்கள். அப்போது ஆடு கத்தியது. அதைக்கேட்டு கண்விழித்து எழுந்த பொன்னப்பன் வெளியே வந்து பார்த்தார். பின்னர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஆடு திருட வந்த மர்ம நபர்களை சுற்றிவளைத்து பிடித்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். 
கைது
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோபி கொங்கர் பாளையத்தை சேர்ந்த 17 வயது வாலிபர், அவருடைய கூட்டாளிகள் சத்தியமங்கலம் அருகே உள்ள காளிகுளத்தை சேர்ந்த கறிக்கடை சிரஞ்சீவி (28), புளியம்பட்டி அருகே உள்ள காராபாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் (22), தினேஷ் (21), கோபி கே.என்.பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (19), பவானிசாகர் அகதிகள் முகாமை சேர்ந்த சார்லஸ் மிராண்டா (22), கரண் (20) ஆகிய 7 பேர் என்று தெரிந்தது.
இதைத்தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள். 
இந்த கும்பல் வேறு எங்காவது ஆடுகளை திருடினார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

----
Reporter : P.RAGUNATHAN  Location : Erode - P.PULIYAMPATTI

தொடர்புடைய செய்திகள்

1. 72 மாற்றுத்திறனாளிகள் கைது
72 மாற்றுத்திறனாளிகள் கைது
2. கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
3. சென்னையில், பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பாக திருப்பி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
4. விவசாயி கொலை
கல்வராயன்மலை அருகே விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. தாய்-மகன் கைது
தாய்-மகன் கைது

அதிகம் வாசிக்கப்பட்டவை