பெருந்துறையில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பெருந்துறையில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெருந்துறையில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு
பெருந்துறையில் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
2 சிறுமிகள்
பெருந்துறை சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 62). இவர் பழைய பிளாஸ்டிக் பைகள், அட்டைகளை சேகரித்து எடைக்கு போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்தநிலையில் தங்கமுத்து பெருந்துறை பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமிகள் 2 பேரிடம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
சில்மிஷம்
பின்னர் தங்கமுத்து சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் இதுபற்றி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தங்கமுத்து மீது 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
5 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி மாலதி வழக்கின் இறுதி விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு கூறினார். இதில் குற்றவாளி தங்கமுத்துவுக்கு 2 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்காக தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தங்கமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ேமலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.
Related Tags :
Next Story