வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீா்மானம்


வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீா்மானம்
x
தினத்தந்தி 24 Jan 2021 4:02 AM IST (Updated: 24 Jan 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை:
வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று நெல்லையில் நடந்த மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி திரும்ப பெற வேண்டும். 
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்து அல்லது 60 வயதை கடந்து வாழும் அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
சலுகைகள் 
முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு செல்வோருக்கு இதுவரை இருந்து வந்த சலுகைகளையே தொடர வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளர் ஹாரூன் ரசீது, இணை பொதுச்செயலாளர் ரிபாயி, துணை பொதுச் செயலாளர்கள் பாரூக் ராவுத்தர்ஷா, ஜெய்னுலாபுதீன், தைமியா, செல்லச்சாமி, நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், மாவட்ட பொருளாளர் மூசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story