பாளையங்கோட்டையில் பரபரப்பு: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பெண் போலீஸ் திடீர் மயக்கம்


பாளையங்கோட்டையில் பரபரப்பு: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பெண் போலீஸ் திடீர் மயக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2021 4:28 AM IST (Updated: 24 Jan 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பெண் போலீஸ் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

அப்போது போலீஸ், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

பெண் போலீஸ் மயக்கம்

நேற்று 2-வது நாளாக போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. அப்போது ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீஸ் ராதா (வயது 21) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதைக்கண்ட சக பெண் போலீசார் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பிறகு சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பினார். உடல் சோர்வு காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அணிவகுப்பு ஒத்திகையின்போது பெண் போலீஸ் திடீரென்று மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story