கல்கட்டகி அருகே அதிரடி சோதனை கல்குவாரியில் பதுக்கிய வெடிப்பொருட்கள் பறிமுதல் போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை
கல்கட்டகி அருகே உள்ள கல்குவாரியில் போலீசார், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உப்பள்ளி,
சிவமொக்கா தாலுகா ஹூனசோடு கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு கடந்த 21-ந்தேதி லாரியில் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பொருட்கள் வெடித்ததில், 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல, தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா முத்தகி கிராமத்தில் உள்ள சிவக்குமார் பட்டீல் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று கல்கட்டகி போலீசார் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கல்குவாரியில் சட்டவிரோதமாக ெஜலட்டின் குச்சி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வருவதை அறிந்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் கல்குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 234 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்துகொண்டனர்.
இதுகுறித்து கல்கட்டகி போலீசார், கல்குவாரி உரிமையாளர் சிவக்குமார் பட்டீல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story