சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jan 2021 12:27 AM GMT (Updated: 24 Jan 2021 12:27 AM GMT)

சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி பணப்பலன்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

மனோகரன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் முருகசெல்வி, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் திருவம்பலம் பிள்ளை, தலைமை கணக்கு அலுவலர் மாரியப்பன், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், பணிமனை கிளை மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.88.58 கோடி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நெல்லை மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 434 போக்குவரத்து ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.88.58 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கினார்.

பின்னர் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்துக்கு செல்லும் வகையில் ரூ.10 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாசில்தார் திருமலைசெல்வி, நகரசபை ஆணையாளர் சாந்தி, நகரசபை பொறியாளர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நெல்லை பேரங்காடி துணைத் தலைவர் வேலுச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், வேல்முருகன், ரமேஷ், வாசுதேவன், சங்கரன்கோவில் பணிமனை அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story