மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு + "||" + ADMK Booth Committee Executive Meeting attended by Minister CV Shanmugam

அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிளியனூரில் நடைபெற்றது. இதற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.


இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி, செல்லப்பெருமாள், கிளியனூர் கூட்டுறவு வங்கி தலைவர் பிரபு, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ், பாசறை செயலாளர் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது. இதில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டியில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, மாநில பொதுக்குழு லட்சுமிநாராயணன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, மாவட்ட பேரவை துணைதலைவர் ரமேஷ், நகர பேரவை செயலாளர் பலராமன், நகர துணை செயலாளர் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஜாகீர் உசேன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் வாசு, பாசறை செயலாளர் ஈஸ்வரன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகர தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் ராஜேஷ், ராஜா முருகன், கிருஷ்ணன், கலியபெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனாரப்பன், செங்கேணி, பூவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை; பாகிஸ்தான் உள்பட 9 நாடுகள் பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையிலான கொரோனா மேலாண்மைக்கான கூட்டத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 அண்டை நாடுகள் பங்கேற்க உள்ளன.
2. ஆசிரியர் வாரிய தேர்வினை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஆசிரிய தேர்வு வாரிய தேர்வுகளை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
3. வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
4. தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தினார்.
5. எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க. அடிமையாக இருக்காது அமைச்சர் பரபரப்பு பேட்டி
எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க. அடிமையாக இருக்காது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.