திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story