மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியி்ல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இன்றும் இந்த பணி தொடர்கிறது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் உடன் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களும், வன ஆர்வலர்களும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த முறை வனத்துறை ஊழியர்கள் மட்டும் தங்களுக்கு உரிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story