வேலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2021 10:43 PM IST (Updated: 24 Jan 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டன. அதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story