தென்காசியில் நாளை குடியரசு தின விழா கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார்
தென்காசயில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்.
தென்காசி:
நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்தின் 2-வது குடியரசு தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு அங்கு மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. காலை 8.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார். அப்போது போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ- மாணவிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story